×

வெள்ளியணை, மாயனூர் பகுதியில் கடைகளில் குட்கா பொருட்கள் விற்க முயன்ற 2 பேர் மீது வழக்கு

கரூர், ஜூலை 22: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம், வெள்ளியணை, மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டீக்கடை மற்றும் மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று நேற்றுமுன்தினம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் மேற்படி கடைகளில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக அந்தந்த பகுதிகளை சேர்ந்த பிரேம்குமார், ஜனார்த்தனன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், அவர்களிடம் இருந்து 400 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post வெள்ளியணை, மாயனூர் பகுதியில் கடைகளில் குட்கா பொருட்கள் விற்க முயன்ற 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Velliyanai, Mayanur ,Karur ,Karur district ,Velliyanai ,Mayanur police station ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...