திருச்செங்கோடு, ஜூலை 22: திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தில் நடைபெற்ற திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி பங்கேற்று பேசினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார பொதுக்கூட்டம், திருச்செங்கோடு கைலாசம்பாளையத்தில் நடைபெற்றது. கிழக்கு நகர திமுக பொறுப்பாளர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, தலைமைக் கழக பேச்சாளர் ஆடுதுறை உத்திராபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
இதில், திருச்செங்கோடு நகர திமுக செயலாளர் நடேசன், மேற்கு மாவட்ட வழக்கறிஞரணி தலைவர் சுரேஷ்பாபு, திமுக இளைஞரணி துணை செயலாளர்கள் நவலடி ராஜா, மல்லை ஜெகதீஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜிஜேந்திரன், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன், நகர அவைத்தலைவர் மாதேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல், ராதா சேகர், அண்ணாமலை, மாதேஸ்வரன், நகர இளைஞரணி செயலாளர் செங்கோட்டுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் appeared first on Dinakaran.
