பவானிசாகர் அருகே 108 ஆம்புலன்சில் பிரசவம்

 

சத்தியமங்கலம், டிச. 7: பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் செல்வன் (24), பெயிண்டர். இவரது மனைவி திரிஷா (21). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக புஞ்சைப் புளியம்பட்டியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வந்து திரிஷாவை மீட்டு, சத்தியமங்கலம் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

ஆம்புலன்சை சனாவுல்லா ஓட்டினார். மருத்துவ உதவியாளர் ரசீலா உடனிருந்தார்.
எரங்காட்டூர் அருகே வந்தபோது பிரசவ வலி அதிகமானதால் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ரசீலா ஓட்டுநர் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் திரிஷாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்தனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

Related Stories: