- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திமுக அரசு
- தூத்துக்குடி
- அமைச்சர்
- Geethajeevan
- தூத்துக்குடி அண்ணாநகர்
- திமுக…
தூத்துக்குடி, ஜூலை 21: தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், வளர்ச்சி திட்டங்கள் தொடரவும் மீண்டும் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதி திமுக இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள்விழா, திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பிரசார கூட்டம் நடைபெற்றது. பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில், ‘தமிழகத்தின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் கலைஞர் வழியில் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், முதலமைச்சரின் நடவடிக்கையால் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள் முன்னேற்றம், இளைஞர்கள், மாணவர்களின் எதிர்காலத்தை கருதி புதுப்புது திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
இதனை பிறமாநிலங்களும் பின்பற்றி வருகிறது. எனவே, தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், வளர்ச்சி திட்டங்கள் தொடரவும் மீண்டும் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஆதரவு தரவேண்டும். 2வது முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பணியாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும். மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட எந்த தேவையாக இருந்தாலும் மக்களைத் தேடி அரசு நிர்வாகம் செல்லும் வகையில் செயல்படுத்தப்படும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்’ என்றார்.
கூட்டத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநில சிறுபான்மை நலஉரிமை பிரிவு துணைச்செயலாளர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், மாநகர துணைச்செயலாளர் கனகராஜ், பகுதி செயாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், சுரேஷ்
குமார், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, கண்ணன், ராமர், ஜான், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, வட்டச் செயலாளர்கள் பொன்பெருமாள், சுரேஷ், பாலகுருசாமி, செந்தில்குமார், மணி, அல்பர்ட் உள்பட பலர் பங்கேற்றனர். தரிசு நிலத்தொகுப்பு வேளாண் சேவை மையம் சாத்தான்குளம், ஜூலை 21: சாத்தான்குளம் வட்டாரத்தில் தரிசு நில தொகுப்பு மற்றும் விவசாய சேவை மையம் அமைக்க தகுதிவாய்ந்த விவசாயிகள் அணுகுமாறு வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) சுஜாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2025-26ம் ஆண்டில் சாத்தான்குளம் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சாத்தான்குளம் வட்டாரத்தில் தரிசு நிலத்தொகுப்பு அமைத்திடும் விவசாயிகளுக்கு இலவசமாக அரசின் மூலம் சொட்டு நீர் பாசனமும், மின் இணைப்பும் இலவசம் அமைத்து தரப்படும். தரிசு நிலத்தொகுப்பானது குறைந்தபட்சம் 8 விவசாயிகள், அதற்கு மேலோ ஒன்று சேர்ந்து 10-12 ஏக்கர் அதற்கு மேலோ உள்ள நிலங்களை ஒன்றினைத்து உருவாக்கப்படும். அத்தரிசு நிலங்கள் சொட்டுநீர்ப் பாசனத்திற்கு ஏதுவாக தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
இத்திட்டம் குறித்த மேல் விபரங்களுக்கு சாத்தான்குளம் வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் சாத்தான்குளம் வட்டாரத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் விவசாயிகள் சேவை மையங்களான உரக்கடைகள், இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பு மையம், மற்றும் வேளாண் இயந்திரம் வாடகை மையம் அமைக்க விரும்பும் வேளாண் பட்டம் அல்லது பட்டயம் படித்த தொழில்முனைவோருக்கு 10 லட்சத்தில் தொழில் துவங்கினால் ரூ. 3 லட்சம் மானியமாக வழங்கப்படும். எனவே, இதில் விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டய படிப்பு படித்தோர் சாத்தான்குளம் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, வேளாண் துறை சார்ந்த அலுவலர்களையோ தொடர்பு கொள்ளலாம்.
2025-26ம் ஆண்டில் முதல்வரின் மண்ணுயிர்காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அங்கக வேளாண் இடு பொருட்களான மண்புழு உரம், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமில கரைசல் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்ய விரும்பும் சாத்தான்குளம் வட்டார விவசாய இதர குழுக்களுக்கு அரசின் வாயிலாக ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ள சிறப்பாக செயல்பட்டு வரும் குழுக்கள் தங்களது முந்தைய செயல்பாட்டு விவரங்களுடன் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ, வேளாண் துறை சார்ந்த அலுவலர்களையோ, தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படவும், வளர்ச்சி திட்டங்கள் தொடரவும்: திமுக ஆட்சி மீண்டும் அமைய மக்கள் ஆதரவு தரவேண்டும் appeared first on Dinakaran.
