கரூர், ஜூலை 21: ஆடி கிருத்திகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை நாளை அனைத்து தரப்பு மக்களும் விசேஷ நாளாக கருதி கடைபிடித்து வருகின்றனர். அதனடிப்படையில், நேற்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, கரூர் வெண்ணைமலை முருகன் கோயில், பாலமலை முருகன் கோயில், புகழி மலை முருகன் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் முருகன் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர். நேற்று அனைத்து முருகன் கோயில்களிலும் அதிகளவு பக்தர்கள் வந்து சென்றதால் கரூர் மாவட்டம் முழுவதும் அதிகமாக கூட்டமாக இருந்தது.
The post ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.
