கரூர் ஜூலை 20: கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதலமைச்சர் ஆணையின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை அவர்களது இல்லங்களுக்கு சென்று அளிக்கும் வகையில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் தரவுகள் சேகரிக்கும் சமுதாய கணக்கெடுப்புபணி கரூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதில் ஒரு கரூர் மாவட்டத்தில் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள் 8 பேரூராட்சிகள் 156 ஊராட்சி மன்ற பகுதிகளில் 200 களப்பணியாளர்கள் கொண்டுவீடு வீடாக கணக்கெடுக்கும்பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியின் படி ஒரு சில பொதுமக்கள் தங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் மாற்றுத்திறனாளியாக இருப்பதை தெரியப்படுத்த விரும்பமாட்டார்கள். அப்படிப்பட்ட பொதுமக்களுக்கும் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கணக்கெடுப்பு படி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு வீடு வீடாக சென்று கணக்கெடுப்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்க்கையில் வசந்தம் பிறக்கும். மேலும் ஊனத்தின் தன்மைக்கு ஏற்றார் போல் பல்வேறு திட்டங்களும் சலுகைகளும் அரசு அறிவித்துள்ளது பயன்படுத்துவதற்கு ஏதுவாக அமையும். தற்போது ஏராளமான சிறு தொழில்கள் கை தொழில்கள் தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காகஅறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கணக்கெடுப்பு பணி சமுதாய சேவை வழங்கும் நிறுவனமான சிஆர்டிஎஸ் தொண்டு நிறுவனம் மூலமாக சமுதாய வழி நடத்துனர்கள் மற்றும் சமுதாய மறுவாழ்வு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மூலமாக வீடு வீடாக சென்று கணக்கெடுக்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்கு உட்பட்ட வையாபுரி நகர் 2வது தெருவில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் மோகன்ராஜ் ஆய்வு செய்தார்.கணக்கெடுப்பு பணிக்கு வரும் களப் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து களப்பணியாளர்களுக்கு தகவல்களை தருமாறு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தேவி ரமேஷ்குமார், சிஆர்டிஎஸ் தொண்டு நிறுவனத்தின் பணி நிபுணர்கள் ரஞ்சனி, அசோகன், சுப்பையன் ஆகியோர் கலந்து கலந்து கொண்டனர்.
The post கரூர் மாவட்டம் 156 ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
