ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் ரூ.6.42 கோடியில் பெயரளவிற்கு சீரமைப்பு பணியால் வஉசி பூங்கா சுவர் இடிந்து சேதம்

ஈரோடு, ஜூலை 20: ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் ரூ.6.42 கோடியில் பெயரளவிற்கு மேற்கொண்ட சீரமைப்பு பணியால் வஉசி பூங்கா சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமானது. ஈரோடு மாநகரில் அமைந்துள்ள வஉசி பொழுதுபோக்கு பூங்கா 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த பூங்காவில் மான், மயில், புலி, தாமரைக்குளம், புல்வெளி, வானுயர்ந்த மரங்கள், பறவைகள் உள்ளிட்டவையுடன் வன விலங்குகள் சரணாலயம் போல இருந்தன. இதனால், ஈரோடு மாநகர மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக விளங்கியது.

அப்போது இருந்த நகராட்சி அதிகாரிகள், பணியாளர்களின் அலட்சியத்தால், முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால் புள்ளி மான்கள் ஒவ்வொன்றாக இறந்தன. உணவு, தீனி இல்லாமல் தவித்த அரியவகை விலங்குகளான, புலி, கடமான் போன்றவை மீட்கப்பட்டு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்டது. இதனால், இந்த பூங்காவுக்கு பொதுமக்கள் வருகையும் குறைந்து, பொலிவிழந்து காணப்பட்டது. இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வஉசி பொழுதுபோக்கு பூங்காவை ரூ.6.42 கோடியில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது.

இதில், செயற்கை நீரூற்று, மலர் தோட்டங்கள், நடைபாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களான ஊஞ்சல் போன்றவை அமைக்கப்பட்டது. இதை தவிர பிற சீரமைப்பு பணிகளை எதுவும் மேற்கொள்ளவில்லை. பூங்காவை சுற்றியுள்ள 10அடி உயர சுற்றுச்சுவரில் எவ்வித பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் வேறுமனே வர்ணம் பூசி, ஓவியங்கள் மட்டும் வரையப்பட்டிருந்தது.

The post ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் ரூ.6.42 கோடியில் பெயரளவிற்கு சீரமைப்பு பணியால் வஉசி பூங்கா சுவர் இடிந்து சேதம் appeared first on Dinakaran.

Related Stories: