திருப்பதியில் வேற்று மதத்தை சேர்ந்த 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்து மதத்தை தவிர வேற்று மதத்தை சேர்ந்தவர்கள் பணிபுரியக்கூடாது என்றஅறிவுரை உள்ளது. அதன்படி தேவஸ்தானத்தில் தரக்கட்டுப்பாடு பிரிவு துணை செயற்பொறியாளர் எலிஜர், பர்ட் மருத்துவமனை நர்ஸ் ரோசி, மருந்தாளர் பிரேமாவதி மற்றும் எஸ்.வி. ஆயுர்வேத மருந்தக டாக்டர் அசுந்தா ஆகிய 4 ஊழியர்கள் வேற்று மதத்தை கடைபிடித்து வருவதாக குற்றச்சாட்டு வந்தது.

இந்த சூழலில் விஜிலென்ஸ் துறை சமர்ப்பித்த அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை வைத்து இந்த 4 ஊழியர்களும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நடத்தை விதிகளை பின்பற்றவில்லை என்பதால் தேவஸ்தான விதிகளின்படி அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4 ஊழியர்களும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதியில் வேற்று மதத்தை சேர்ந்த 4 ஊழியர்கள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: