ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், ஜூலை 20: சேலத்தில், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பாஜ முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷை, ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் பாஜவினர் அனுசரித்து, மரியாதை செலுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட பாஜ அலுவலகத்தில், ஆடிட்டர் ரமேஷின் 12ம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை கலந்து கொண்டு, ஆடிட்டர் ரமேஷின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியின் போது, மாவட்ட பாஜ தலைவர் சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

The post ஆடிட்டர் ரமேஷின் நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: