குமாரபாளையம், ஜூலை 20: குமாரபாளையம் எக்ஸல் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரியில் 2025ம் ஆண்டிற்கான வெள்ளை அங்கி அணியும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் சரவணன் தலைமை வகித்தார். எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன் மற்றும் துணைத்தலைவர் டாக்டர் மதன் கார்த்திக், தொழில்நுட்ப இயக்குநர் செங்கொட்டையன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அப்போது, இவ்விழாவானது மருத்துவத்துறையில் நுழையும் மாணவர்களுக்கு ஒழுக்க நெறியும், சமூக பொறுப்பும் அடிப்படை கற்றலாகும் ஒரு முக்கிய நிகழ்வாகும் என தெரிவித்தனர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவக்கவுன்சில் தலைவர் டாக்டர் ஜெயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாணவர்கள் வெள்ளை அங்கி அணிந்து, மருத்துவ ஒழுக்க நெறிகளை பின்பற்றி, தன்னலமற்ற சேவையை வழங்குவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
The post மருத்துவக்கல்லூரியில் வெள்ளை அங்கி அணியும் விழா appeared first on Dinakaran.
