அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்காணிப்பு கேமரா வசதி

நாமக்கல், ஜூலை 20: நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவி கேமரா வசதியை மாதேஸ்வரன் எம்.பி., தொடங்கி வைத்தார். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி வளாகத்தை கண்காணிக்கும் வகையில், மாதேஸ்வரன் எம்.பி., 7 இடங்களில் சிசிடிவி கேமராக்களை தனது சொந்த செலவில் அமைத்து கொடுத்துள்ளார். இந்த கேமராக்கள் திறப்பு விழா, மாவட்ட தீரன் தொழிற்சங்க செயலாளர் இளங்கோ முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாதேஸ்வரன் எம்.பி. கலந்து கொண்டு கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து கேமராக்களை இயக்கி வைத்தார். இதில், கொமதேக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் மணி, மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகதீஷ், பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசராகவன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

The post அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்காணிப்பு கேமரா வசதி appeared first on Dinakaran.

Related Stories: