×

காவலரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உட்பட 2 பேர் கைது வேலூர் மத்திய சிறையில் பணியிலிருந்த

வேலூர், ஜூலை 20: வேலூர் மத்திய சிறையில் பணியிலிருந்த காவலரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் உள்ள நன்னடத்தை கைதிகளை கொண்டு சிறைக்குள் போலீசாருக்கான ஷூக்கள் தயாரிப்பு, பெட்ரோல் பங்க், விவசாயம், கோழி விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மத்திய சிறை அருகே நன்னடத்தை கைதிகள் நடத்தும் கோழிக்கறி கடையில், முதல் நிலை காவலர் தங்கமகாராஜா பாதுகாப்பு பணியில் நேற்று முன்தினம் இருந்தார். அப்போது, சிறையில் இருந்து விடுதலையாகி சென்ற வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த ரவுடி உதயகுமார் மற்றும் அவனது கூட்டாளி ராமு ஆகியோர் முதல் நிலை காவலர் தங்கமகாராஜாவை கத்தியை காட்டி, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து ரவுடி உதயகுமார், ராமு ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post காவலரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி உட்பட 2 பேர் கைது வேலூர் மத்திய சிறையில் பணியிலிருந்த appeared first on Dinakaran.

Tags : Vellore Central Prison ,Vellore ,Dinakaran ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...