உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை

 

கோபி, ஜூலை 19: கோபி அருகே உள்ள காசிபாளையம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம், காசிபாளையம் பேரூராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி வெற்றிவேல் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், கோபி தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில், கோபி சார் ஆட்சியர் சிவானந்தம் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். முகாமில் மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி 216 மனுக்கள், ஆதார் சேவை குறித்த 12 மனுக்கள் உட்பட 454 மனுக்கள் பெறப்பட்டது. மருத்துவத்துறை சார்பில் 226 பேருக்கு பொது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களில் வருமான சான்று, குடும்ப அட்டை திருத்தம், சாதி சான்று கேட்டு விண்ணப்பித்த 7 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் தன்னார்வலர்களாக பணியாற்றிய கோபி பிகேஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் 20 பேருக்கு பரிசுகளும், பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி, சார் ஆட்சியர் சிவானந்தம் மஞ்சள் பை வழங்கினார்.

The post உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை appeared first on Dinakaran.

Related Stories: