×

துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி வழிபாடு

துவரங்குறிச்சி, ஜூலை 19: ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் பெண்கள் என பெருந்திரளானனோர் கலந்து கொண்டனர். மூலவருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

The post துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi Bhootanayagi Amman Temple ,Aadi ,Dwarankurichi ,Trichy district… ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்