- ஸ்டாலின்
- உங்களுடன் திட்ட முகாம்
- கானம் பேரூராட்சி
- உடன்குடி
- அமைச்சர்
- அனிதா ராதாகிருஷ்ணன்
- உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- குரும்பூர்
- சமூகத்தில்
- நலன்புரி
- மையம்
- தின மலர்
உடன்குடி, ஜூலை 19: கானம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். குரும்பூர் அருகேயுள்ள கானம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட வழங்கல் அதிகாரி உஷா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். முகாமில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தி துறை, மருத்துவம் மற்றும் நலவாழ்வுத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்துறை மூலம் பொதுமக்களுக்கு இலவச பரிசோதனை செய்யப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன. இதில் திமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், கானம் டவுன் பஞ்.,செயலாளர் வெங்கடேஷ்வரி, துணை தலைவர் அந்தோணி காட்வின், முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்ஜே.ஜெகன், கானம் நகர திமுக செயலாளர் ராமஜெயம், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் செந்தமிழ்சேகர், வள்ளிவிளை வெங்கடேஷ், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கானம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் appeared first on Dinakaran.
