
சென்னை: எங்கள் கூட்டணி சரியாகவும், நேர்மையாகவும் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் ரூ.164.92 கோடி கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
‘திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் அவமானப்பட்டுள்ளனர் என கூறி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது கூட்டணிக்கு அழைத்துள்ளாரே’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘இங்கு இருப்பவர்கள் எல்லாம் அவமானப்பட்டார்கள் என்று அவரிடம் போய் சொன்னார்களா? அவர் தான் அவமானப்பட்டு நிற்கிறார். ஒருத்தர் கூட்டணி ஆட்சி இருக்கு என்கிறார். ஒருத்தர் கூட்டணி ஆட்சி இல்லை என்கிறார். அவர் தான் அடிபட்டு கிடக்கிறார். எங்கள் கூட்டணி எல்லாம் சரியாகவும் நேர்மையாகவும் உள்ளது’’ என தெரிவித்தார்.
The post எங்கள் கூட்டணி சரியாகவும், நேர்மையாகவும் உள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி appeared first on Dinakaran.
