×

பாஜ இடம் பிடிப்பது தமிழகத்தில் எளிதல்ல: அண்ணாமலை உறுதி

கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ அலுவலகத்தில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கோவையில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்தது நட்பு ரீதியிலானது. டிடிவி தினகரன் எனது சொந்த ஊருக்கு வரும்போது இரவு உணவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதனால் வந்தார். மற்றபடி என்டிஏ கூட்டணியில் யார் இணைய வேண்டும், யார் இணையக்கூடாது என்பதற்கு தேசிய தலைமை முடிவு எடுக்கும். தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இன்னும் இணையாமல் இருக்கிறார்கள். இவர்கள் வந்தால் என்டிஏ கூட்டணி இன்னும் வலிமையாக மாறும். தமிழகத்திற்கு அமித்ஷா வருகை குறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவிப்பார்.

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டாவுடன் மூடிய அறையில் பேசியதை நான் பொதுவெளியில் சொல்ல முடியாது. அதனை சொன்னால் தவறாக போய்விடும். தமிழகத்தில் பா.ஜ முதல் இடத்தை பிடிப்பது எளிதல்ல என்பதை தனியார் டி.வி நிகழ்ச்சியில் குறிப்பிட்டேன். செங்கோட்டையன் த.வெ.க சென்றிருப்பது, அவர் எடுத்த முடிவு. அவருக்கும் எங்களது மாநில தலைவருக்கும் ஒரு கருத்து, வார்த்தை போர் இருந்தது. அதனை அப்படியே விட்டுவிடுங்கள். மேலும், எஸ்.ஐ.ஆர் பணியின் அடிப்படையில் சென்னையில் 26 சதவீதம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது. எப்போதும் சென்னையில் 40 அல்லது 45 சதவீதம் வாக்கு பதிவாகும். இனி 60 சதவீதம் வாக்கு பதிவாகும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Tags : BJP ,Tamil Nadu ,Annamalai ,Coimbatore ,president ,Peelamedu, Coimbatore ,OPS ,TTV Dinakaran ,
× RELATED டெல்லி புறப்பட்டுச் சென்றார் நயினார் நாகேந்திரன்