- திராவிட
- துறையூர்
- திராவிட மாதிரி அரசு சாதனை விளக்கக் கூட்டம்
- துறையூர் திமுக மேற்கு ஒன்றிய இளைஞர் பிரிவு.
- திருச்சி வடக்கு மாவட்டம்
- திராவிட மாதிரி
- சாதனை
- Thirumanur
- துறையூர் திமுக மேற்கு ஒன்றிய இளைஞர் அணி...
- திராவிட மாதிரி அரசாங்க சாதனை
- தின மலர்
துறையூர், ஜூலை 18: துறையூர் திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் திமுக மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் திருமானூரில் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. துறையூர் எம்எல்ஏ.ஸ்டாலின் குமார் தலைமை வைத்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன், துறையூர் நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ சரவணன், துறையூர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சரண்யா மோகன் தாஸ் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், தொகுதி பொறுப்பாளர் தங்க கமல் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண் அனைவரையும் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர்கள் துரைபாண்டியன், சேக்அலி மாஸ்அலி ஆகியோர் விளக்கு உரையாற்றினர். நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பட்ட அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், சுற்றுச்சூழல் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் அம்மன் பாபு, கலை பகுத்தறிவு அணி துணை அமைப்பாளர் லெனின், மாவட்ட மாணவரணி அணி துணை அமைப்பாளர் அகத்தீஸ்வரன் மாவட்ட மகளிர் அணி கிருபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கிட்டப்பா, பூபதி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார் நன்றி கூறினார்.
The post துறையூரில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.
