கரூர், ஜூலை 18: கரூர் திருமா நிலையூர் பகுதியிலிருந்து அமராவதி ஆற்றுக்கு செல்லும் வாய்க்கால் பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் குடியிருப்புகளை ஒட்டி அமராவதி ஆற்றுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பாதையில் வாய்க்கால் செல்கிறது. இதன் காரணமாக வாய்க்கால் மேற்புறம் சிறிய அளவிலான பாதை அமைக்கப்பட்டு அனைத்து வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வாய்க்காலை கடந்து செல்லும் பாதையில் தடுப்புச் சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் வசித்து வரும் வாகன ஓட்டிகள் பீதியுடன் கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். எனவே, இந்த வாய்க்கால் பகுதியை சுற்றிலும் வாகன ஓட்டிகள் எளிமையாக கடந்து செல்லும் வகையில் தடுப்புச் சுவர் அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, தடுப்புச் சுவர் அமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
The post தடுப்புச்சுவர் இல்லாத வாய்க்கால் அச்சத்துடன் செல்லும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.
