அந்தியூர், ஜூலை 18: அந்தியூர் வருவாய் வட்டத்தில் உள்ள 14 விஏஓக்கள் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வில் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதன்படி, வேம்பத்தி ‘ஆ’ கிராமத்தில் பணிபுரிந்த அதிபதி நெருஞ்சிப்பேட்டைக்கும், பிரம்மதேசம் சந்தோஷ்குமார் அம்மாபேட்டை ‘அ’ கிராமத்துக்கும், பட்லூர் முருகேசன், அந்தியூர் ‘ஆ’ கிராமத்திற்கும், நகலூரில் பணிபுரிந்த யசோதா, அம்மாபேட்டை ‘ஆ’ கிராமத்திற்கும், அம்மாபேட்டை ‘அ’ கிராமத்தில் பணிபுரிந்த தமிழ்ச்செல்வி பட்லூருக்கும் மாறுதல் செய்யப்பட்டனர்.
ஆரியகவுண்டனூர் வீரமுத்து நகலூருக்கும், ஒட்டார்பாளையத்தில் பணியாற்றிய ரமா, ஒட்டார்பாளையம் ‘ஆ’க்கும், அத்தாணி அருள்மணி பிரம்மதேசத்துக்கும், இலிப்பிலி தமிழரசன் பர்கூர் ‘ஆ’ கிராமத்திற்கும், நெருஞ்சிப்பேட்டை முத்து இலிப்பிலிக்கும், அம்மாபேட்டை ‘ஆ’ கிராம நிர்வாக அதிகாரி அண்ணாதுரை கெட்டிசமுத்திரத்துக்கும், அந்தியூர் ‘அ’ கிராம சதீஷ் வேம்பத்தி ‘ஆ’ கிராமத்திற்கும், அந்தியூர் மணிகண்டன் வேம்பத்தி ‘அ’ கிராம அலுவலகத்துக்கும் மாற்றப்பட்டனர். இதுதவிர, அந்தியூர் வட்டத்தில் காலியாக உள்ள ஆரியகவுண்டனூர் கிராமத்துக்கு அதிபதியும், அந்தியூர் ‘அ’ கிராமத்திற்கு முருகேசனும் கூடுதல் பொறுப்பு வகிக்க, கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
The post அந்தியூர் வருவாய் வட்டத்தில் 14 விஏஓக்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.
