உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை ரஷ்யா தீவிரமாக எடுக்க மறுப்பு தெரிவித்து வருகிறது. நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால் பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடுமையான 100 சதவீத பொருளாதார தடைகள் விதிக்கப்படும்.
இதன்காரணமாக இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படலாம் என மார்க் ருட்டே கூறினார். ஏற்கனவே ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்கும் மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதியில் இந்தியா சுமார் 15% பங்களிப்பை கொண்டுள்ளது.
The post ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் பொருளாதார தடையை விதிக்கப்படும்: இந்தியாவுக்கு NATO எச்சரிக்கை appeared first on Dinakaran.
