- நொய்யல் ஆத்துப்பாளையம் அணை
- கே. பரமத்தி
- மாவட்ட கலெக்டர்
- தங்கவேல்
- அரவக்குறிச்சி
- சட்டமன்ற உறுப்பினர்
- மொஞ்சனூர் இளங்கோ
- கரூர் மாவட்டம்
- புகளூர் தாலுகா…
க.பரமத்தி, ஜூலை17: நொய்யல் ஆத்துப்பாளையம் அணையிலிருந்து பாசனத்திற்கு மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ ஆகியோர் நேற்று தண்ணீர் திறந்து விட்டனர். அப்போது தொடர்ந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுபதாக கூறினர்.
கரூர் மாவட்டம், புகழூர் வட்டம் க.பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சியில் நொய்யல் ஆத்துப்பாளையம் அணை என்றழைக்கப்படும் நொய்யல் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த அணைக்கு நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் வரும் உபரி நீரையும், கீழ் பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரும் கடந்த நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூரில் உள்ள மதகணை திறக்கப்பட்டு நொய்யல் ஆற்று உபரிநீர் ஆத்துப்பாளையம் அணைக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. எனவே பாசனத்திற்கு திறக்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட கழக செயலாளர் செந்தில்பாலாஜியிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அதன்படி முதலமைச்சர் ஆணைக்கிணங்க, மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் நேற்று இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கீழ்பவானி வடி நில கோட்ட செயற்பொறியாளர் திருமூர்த்தி வரவேற்றார். புகழூர் தாசில்தார் தனசேகரன், கீழ்பவானி வடி நில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமார், ஒன்றிய துணை செயலாளர் நல்லசிவம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ ஆகியோர் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து பார்வையிட்டனர்.
பின்னர் எம்எல்ஏ இளங்கோ, உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமார் ஆகியோர் கூறுகையில், இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் தற்போது ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனையடுத்து ஒருபோக பாசன வசதிக்காகவும், கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் நிலத்தடி நீர் உயரும் சிறப்பு நனைப்பிற்காக நேற்று (16ம் தேதி) முதல் தொடர்ந்து 20 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். நீர் வரத்து இருப்பை பொறுத்து சுமார் 20 நாட்களுக்கு மிகாமல் 60 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 90 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் கரூர் மாவட்டத்தில் அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சைபுகழூர், புஞ்சைதோட்டக்குறிச்சி, ஆத்தூர், புஞ்சைகடம்பன்குறிச்சி, மண்மங்கலம், குப்பிச்சிபாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 19ஆயிரத்து 480 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் மேற்கண்ட பகுதி நிலங்கள் ஒருபோக பாசன வசதியினை பெறும் அதன்பிறகு நீர் வரத்து இருப்பை பொறுத்து செயல்பட உள்ளது என்று தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, அதிகாரிகள், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அதிகாரிகள். உதவி பொறியாளர் குமரேசன் நன்றி கூறினார்.
The post நொய்யல் ஆத்துப்பாளையம் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.
