ஈரோடு, ஜூலை 17: பொதுமக்களுக்கு தரமான முறையில், சுகாதாரத்துடன் உணவு வழங்க வேண்டும் என அம்மா உணவக ஊழியர்களுக்கு, மாவட்ட கலெக்டர் கந்தசாமி அறிவுறுத்தினார். ஈரோடு காந்திஜி ரோட்டில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவின் தரம், பணியாளர்கள் விபரம், தினசரி உணவகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் விபரம், தினசரி உணவு பட்டியல், உணவு விற்பனை விலை விபரம், பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, உணவகத்தில் சாப்பிட வந்த பொதுமக்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அதேப்பகுதியில் உள்ள 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சோலார் பகுதியில் இயங்கி வரும் அறக்கட்டளையில் ஆய்வு மேற்கொண்டு, மறுவாழ்வு பெற்ற யாசகர்கள் விபரம், முதியோர்கள் பராமரிப்பு முறை, படுக்கை வசதி, அடிப்படை வசதிகள், உணவு பட்டியல், மருத்துவ வசதிகள், அவசர கால பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, துணை ஆணையர் தனலட்சுமி, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
The post அம்மா உணவகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.
