சத்தியமங்கலம், ஜூலை 17: அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது வார்டு பகுதியில் மாநில பகிர்வு நிதி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவர் மகேஸ்வரி செந்தில்நாதன் தலைமை தாங்கி கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் வக்கீல் செந்தில்நாதன், பேரூராட்சி துணைத்தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர் வேலுச்சாமி, வார்டு செயலாளர் முருகன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ரூ.16 லட்சத்தில் கான்கிரீட் சாலை அரியப்பம்பாளையத்தில் பூமிபூஜை appeared first on Dinakaran.
