கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன.
தென்பெண்ணை ஆற்றின் அருகே கிருஷ்ணகிரியில் கே.ஆர்.பி. அணை கட்டப்பட்டுள்ளது. 52 அடி உயரமுள்ள இந்த அணையிலிருந்து ஆண்டு தோறும் இருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.
அதன்படி இன்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் மலர்தூவி தண்ணீரை திறந்து வைத்தனர்.
கே.ஆர்.பி. அணையில் இருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் இருந்து இன்று முதல் வினாடிக்கு 151 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கே.ஆர்.பி. அணையின் பாசன பகுதிகளான பெரியமுத்தூர், தளி, குண்டலப்பட்டி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் உள்ள 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
கே.ஆர்.பி. அணையின் தற்போதைய நீரைமட்டம் மற்றும் நீர்வரத்தை கொண்டு 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
The post கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு நீர்திறப்பு appeared first on Dinakaran.
