மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

 

புழல், ஜூலை 16: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றம், சோழவரத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

இதனால் பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 324 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 568 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,524 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 17.6 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.

புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல் 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 157 மில்லியன் கனஅடியாக உள்ளது, நீர்வரத்து இல்லை. 18.86 அடி உயரத்தில் தற்போது 3.82 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.

The post மழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: