- சங்காதர சதுர்த்தி
- ஆர்.டி.மலை கோயில்
- தோகைமலை
- மகா சங்கடஹாரா
- ஆர்.டி.மலை
- விராச்சிலேஸ்வரர்
- பெரியநாயகி அம்பாள்
- கரூர் மாவட்டம் தோகைமலை...
தோகைமலை, ஜுலை 16: தோகைமலை அருகே ஆர்.டி.மலை மலைக்கோவிலில் நடந்த மஹா சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் திருக்கோவிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது. விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடஹர சதுர்த்தியை மஹா சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுகள் தோறும் 12 சங்கடஹர சதுர்த்திகள் வருகின்றது. இவை அனைத்திலும் பக்தர்கள் விதரம் இருந்து விநாயகரை வழிபட முடியாமல் போனாலும் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும் விரதம் இருந்து விநாயகரை மனதார வழிபட்டால் வருடம் முழுவதும் 12 சங்கட சதுர்த்திகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்நிலையில் ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாள் திருக்கோயிலில் மஹா சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக கோயிலில் உள்ள விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிசேகம் செய்தனர். பின்னர் கோவில் எதிரே உள்ள விநாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புசாறு உட்பட 16 வகை திரவியங்களால் சிற ப்பு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கபட்டு உலக மக்கள் அமைதிக்காக சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் அர்ச்சகர் கந்த சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் வேதரத்தினசிவம் குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதில் சுற்றுவட்டாத்தில் இருந்து திரலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post வெற்றிலைக்கு இயற்கை உரம் தோகைமலை அருகே ஆர்.டி.மலை கோயிலில் சங்கடஹர சதுர்த்தி appeared first on Dinakaran.
