அதே போல இந்த நதியின் ஓரங்களில் செயல்பட்டு வந்த 373 சிறிய நீர் மீன் நிலையங்களில் 342 நிலையங்களின் செயல்பாடுகள் சீனா நிறுத்தியுள்ளது. இந்த நதிகளில் வாழும் மீன் இனங்கள் மற்றும் நதியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக, இந்த 300 அணைகளை இடித்ததாக சீனா விளக்கம் அளித்துள்ளது. பல ஆண்டுகளாக சிவப்பு நதியின் குறுக்கே இருந்த அணைகள் மட்டும் மீன் நிலையங்கள் மீன்களின் இடம் பெயர்வை தடுத்து நீரோட்டத்தை கட்டுப்படுத்தியது.
இதனால் அங்கு வாழும் அரியவகை மீன்களின் இனம் பெருக்கம் பெரிதாக பாதிக்கப்பட்டது மட்டுமின்றி மீன் இனங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனை மீட்டெடுக்கவே சீனா இந்த நடவடிக்கைளில் இறங்கியுள்ளது. சுற்றுச்சுழல் நீர்வள மேலாண்மை உயிரின பாதுகாப்பு போன்ற விசயங்களில் லாபத்தை எதிர்பார்க்காமல் இயற்கையின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சீனாவின் இந்த செயல் உலகநாடுகளுக்கே ஒரு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளது.
The post உலக நாடுகளை அதிர வைத்த சீனா.. 300 அணைகளை இடித்து தள்ளி: எந்த நாடும் செய்யாத சம்பவம் appeared first on Dinakaran.
