பவானிசாகர் அருகே கங்காதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா

 

சத்தியமங்கலம், ஜூலை 15: பவானிசாகர் அருகே உள்ள இக்கரை தத்தப்பள்ளி துண்டன்சாலை கிராமத்தில் கங்காதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மகா கணபதி யாகபூஜையுடன் விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து வருண பூஜை, மகாலட்சுமி பூஜை, நவகிரக சாந்தி மற்றும் சகல தேவதை யாகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று (திங்கள்) காலை சிவபெருமானுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முடிவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பவானிசாகர் அருகே கங்காதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: