பவானியில் லாட்டரி விற்றவர் கைது

 

பவானி, ஜூலை 15: பவானி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பவானி, தேவபுரம் பகுதியில் ரோந்து சென்றபோது லட்சுமணன் மகன் சண்முகசுந்தரம் (65), வெள்ளை நிற துண்டு சீட்டுகளில் எண்களை எழுதி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சண்முகசுந்தரத்தை கைது செய்த போலீசார், பணம் ரூ.900 மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அருணை (35) போலீசார் தேடி வருகின்றனர்.

The post பவானியில் லாட்டரி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: