முசிறி, ஜூலை 14: திருச்சி மாவட்டம், முசிறியில் போதையில்லா பாதை குறித்து முசிறி வாலிபர் கண்களை கட்டிக்கொண்டு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு டூவீலர் ஓட்டி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து பல்வேறு விருதுகள் பெற்ற இளைஞர் அரவிந்த் ஸ்ரீகாந்த் என்பவர் கண்களை கட்டிக்கொண்டு போதையில்லா பாதை என்பதை வலியுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தை முசிறி கைகாட்டியில் இருந்து துறையூர் ரோடு, புதிய பேருந்து நிலையம், தா.பேட்டை சாலை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாகச பயணமாக ஓட்டிசென்று மீண்டும் கைகாட்டி பகுதியை வந்தடைந்தார். நிகழ்ச்சியில் தனியார் டிரஸ்ட் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post போதையில்லா பாதை வலியுறுத்தி கண்களை கட்டிக்கொண்டு 2 கி.மீட்டர் டூவீலர் பயணம் appeared first on Dinakaran.
