×

கோவில்பட்டி அருகே விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு

 

துவரங்குறிச்சி, ஜூலை 14: கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் தேனூர் போலம்பட்டியை சேர்ந்த கணேசன் (60) நேற்று முன்தினம் காலை அவரது இருசக்கர வாகனத்தில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை யானைகள் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வளநாடு போலீசார் கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோவில்பட்டி அருகே விபத்தில் சிக்கிய முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Dhuvarankurichi ,Ganesan ,Thenur Polampatti ,Trichy district ,Madurai-Trichy National Highway ,Dinakaran ,
× RELATED மாவட்ட மைய நூலகத்தில் சதுரங்க பயிற்சி முகாம்