×

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.36.08 லட்சம் உதவித்தொகை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

சென்னை: சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.20 லட்சத்துக்கான காசோலையை கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரியிடம், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தேசிய அளவில் பதக்கம் வென்ற சைக்கிள் வீரர் பிரஜித்க்கு ரூ.9,08,999 மதிப்பீட்டிலான அதிநவீன பந்தய சைக்கிள் உபகரணத்தையும், கென்யாவில் நடந்த திறந்தவெளி கிராவல் வேர்ல்டு சீரிஸ் பந்தையத்தில் 6வது இடம் பிடித்து நெதர்லாந்தில் நடைபெற உள்ள UCI உலக கிராவல் சாம்பியன் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பெற்ற சைக்கிளிங் வீரர் ஸ்ரீநாத் லஷ்மிகாந்த்துக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

மேலும், ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த கால்பந்து வீராங்கனைகள் கார்த்திகா மற்றும் பிரியதர்ஷிணி ஆகியோருக்கு தலா ரூ.1.50 லட்சத்துக்கான காசோலைகளை்யும், 52வது சீனியர் தேசிய கேரம் சாம்பியன்ஷிப்-2025 போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினரை வாழ்த்தி, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலை உள்பட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.36.08 லட்சம் உதவித்தொகை மற்றும் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.

The post தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.36.08 லட்சம் உதவித்தொகை: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi ,Nadu Champions Trust Fund ,Chennai ,Tamil Nadu ,Udhayanidhi Stalin ,Tamil Nadu Champions Trust Fund ,Uma Maheshwari ,Queen Mary College ,Dinakaran ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து நந்தன்...