உயர்கல்வி சேர்க்கையில் மாணவிகளின் எண்ணிக்கை 31 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பெருமிதம்

சென்னை: சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி கல்லூரியில் நடைபெற்ற 30-வது பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது: தமிழ்நாட்டில் முதலமைச்சர் புதுமைப் பெண் திட்டத்தால் மாணவிகள் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கை 31 சதவீதம் உயர்ந்துள்ளது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலராகக் கலைஞர் எப்போதும் திகழ்ந்தார். கலைஞர் வழித்தடத்தில் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டு முதல்வர் மதச் சிறுபான்மையினரையும் மொழிச் சிறுபான்மையினரையும் தம்மிரு கண்கள்போல் பாவித்து மிகச்சிறந்ததோர் ஆட்சியை நடத்தி வருகிறார். நமது முதலமைச்சரின் ஆட்சிக்காலம் சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியாக இருந்து வருகிறது. ஒரு சாரார்களுக்கு மட்டுமே உைடமையாக இருந்த கல்வியை நீதிக் கட்சியும், திக, திமுக கடுமையாகப் போராடிப் பெற்ற சமூகநீதி சார்ந்த ‘இட ஒதுக்கீடு‘ கோட்பாட்டின் வெற்றிதான் இது. இன்றைய தலைமுறையினர் இவற்றை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.

The post உயர்கல்வி சேர்க்கையில் மாணவிகளின் எண்ணிக்கை 31 சதவீதமாக உயர்வு: அமைச்சர் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: