சென்னை: சென்னை நொளம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வளாகத்தில் சுயஉதவிகுழுவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்பட உள்ள ‘ஒருங்கிணைந்த சேவை மையத்தை’ வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார். சேவை மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வில்லங்கச்சான்று விண்ணப்பித்தல், ஆவணத்தின் சான்றிட்ட நகல் விண்ணப்பித்தல், திருமண வடிப்பு விண்ணப்பித்தல், வில்லை முன்பதிவு செய்ய விண்ணப்பித்தல், இணையவழி ஆவணம் உருவாக்குதல், சங்க பதிவு விண்ணப்பித்தல், கூட்டாண்மை நிறுவன பதிவு விண்ணப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் குறைந்த கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையுடன் அளிக்கப்படும். இந்த பணிகளை மேற்கொள்ளும் சுயஉதவிகுழுவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிலையான வருமான வாய்ப்பும் இதன்மூலம் கிடைக்கும். இந்த நிகழ்ச்சியில் மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் கணபதி, வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post பதிவுத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் ஒருங்கிணைந்த சேவை மையம்: அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.