பதிவுத்துறையின் சேவைகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று, சென்னை நொளம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வளாகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சுயஉதவிகுழுவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்பட உள்ள “ஒருங்கிணைந்த சேவை மையம்“ திறந்துவைக்கப்பட்டது.
இந்த சேவை மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு வில்லங்கச்சான்று விண்ணப்பித்தல் (Applying for EC) ஆவணத்தின் சான்றிட்ட நகல் விண்ணப்பித்தல் (Applying for CC) திருமண வடிப்பு விண்ணப்பித்தல் (Marriage Extract) வில்லை முன்பதிவு செய்ய விண்ணப்பித்தல் (Booking of Tokens) இணையவழி ஆவணம் உருவாக்குதல் (Online Registration) சங்க பதிவு விண்ணப்பித்தல் (Applying for Societies Registration) கூட்டாண்மை நிறுவன பதிவு விண்ணப்பித்தல் (Applying for Firms Registration) உள்ளிட்ட சேவைகள் குறைந்த கட்டணத்தில் வெளிப்படைத்தன்மையுடன் அளிக்கப்படும்.
இந்த பணிகளை மேற்கொள்ளும் சுயஉதவிகுழுவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிலையான வருமான வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கப்பெறும். இந்நிகழ்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம், க.கணபதி, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அரசுசெயலாளர் ஷில்பா பிரபாகர் சதிஷ்,இ.ஆ.ப., பதிவுத்துறை தலைவர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்,இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்பட உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் பி.மூர்த்தி appeared first on Dinakaran.
