மும்பை: மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த உத்தவ் சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் கூறியதாவது: மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்காக மகாவிகாஸ் அகாடி கூட்டணி உருவாக்கப்பட்டது. அதே போல மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலுக்கு அத்தகைய கூட்டணிகள் தேவையில்லை. மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ளாட்சித் தேர்தலில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியுடன் எங்கள் கட்சி இணைந்து போட்டியிட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனர். தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாததால் விரைவில் இறுதி முடிவை எடுப்போம் என்றார்.
The post உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி தேவையில்லை: சஞ்சய் ராவத் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.