×

குடும்பத் தகராறில் தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

 

கரூர், ஜூலை 10: கரூர் பசுபதிபாளையம் அருகே குடும்பத் தகராறு காரணமாக தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் ராமானூரைச் சேர்ந்தவர் பிரபாகரன்(41). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த சில ஆண்டுகளாக மனைவியை விட்டு தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால், மன விரக்தியுடன் இருந்து வந்தவர், கடந்த 8ம் தேதி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post குடும்பத் தகராறில் தனியார் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Karur ,Pasupathipalayam, Karur ,Prabhakaran ,Ramanur ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...