இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம்

நியூயார்க்: டிரம்பின் தலைமையின் கீழ் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் ஏற்படுவதை அதிபர் டிரம்ப் தடுத்து விட்டதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைசசர் மார்கோ ரூபியோ புகழாரம் சூட்டினார். அதிபர் டிரம்ப் தலைமையில் அமெரிக்க அமைச்சரவை குழு கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் டிரம்ப் அருகே அமர்ந்திருந்த வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அதிபர் டிரம்பை புகழ்ந்து பேசினார்.

அவர் பேசியதாவது:அதிபர் டிரம்பின் தலைமையின் கீழ், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தடுத்து நிறுத்தியது அமெரிக்கா. அதிபர் அவர்களே, உள்நாட்டில் நிகழ்ந்த இந்த சாதனைகள் அனைத்தையும் இங்கே பட்டியலிடுகிறேன்.  உங்கள் தலைமையின் கீழ், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரைத் தடுத்து முடித்துள்ளோம்.காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டாவுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது ஒரு 12 நாள் போர், இது அமெரிக்க நடவடிக்கையுடன் முடிந்தது. அதே போல் அஜர்பைஜான்- ஆர்மீனியா இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என்று நம்புகிறேன். சிரியா மற்றும் லெபனான் காரணமாக முழு மத்திய கிழக்கு மற்றும் அதன் உள்கட்டமைப்பு இப்போது மாறக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. இன்னும் 6 மாதங்கள் கூட ஆகவில்லை. உங்கள் தலைமைக்கும் குழுவிற்கும் இது ஒரு சிறந்த சான்றாகும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப்: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: