பின்னர் மும்பைக்கு குடிபெயர்ந்த இவர்கள் சிறந்த நடிகர் மற்றும் இயக்குனராக இருந்தார்கள். இவர்களுக்கு சொந்தமான வீடுகள் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ளன. இந்த வீடுகள் கடந்த 2014ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் பாரம்பரிய தளங்களாக அறிவித்தார்.
இந்நிலையில் பெஷாவரில் உள்ள இந்த வீடுகளை பராமரித்து பாதுகாப்பதற்காக மாகாண அரசு ரூ.3.38கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மாகாண முதல்வர் அலி அமின் கந்தாபூர் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதி ஒதுக்கீடுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் கேஐடிஇ திட்டத்தின் கீழ் மாகாணத்தில் பாரம்பரிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்கான முக்கிய திட்டங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The post நடிகர்கள் திலீப் குமார், ராஜ் கபூர் வீடுகளை பராமரிக்க ரூ.3 கோடி ஒதுக்கீடு; பாகிஸ்தான் மாகாண அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.
