ஐதராபாத்தில் கலப்பட கள் குடித்த 3 பேர் பலி: 16 பேருக்கு சிகிச்சை

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குகட்பள்ளியில் உள்ள கள்ளுக்கடை களில் கள் குடித்த 19 பேர் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எச்எம்டி ஹில்ஸ் சாய்சரண் காலனியை சேர்ந்த துளசிராம்(47), போஜ்ஜய்யா(55), நாராயணம்மா(65) ஆகியோர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கலப்பட கள் குடித்ததாலேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post ஐதராபாத்தில் கலப்பட கள் குடித்த 3 பேர் பலி: 16 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: