- உழவாரித்தேடி
- 14 கிராமங்கள்
- வேளாண் தகவல் வேலூர் மாவட்டம்
- வேலூர்
- தமிழ்நாடு அரசு
- விவசாய உழவர் நலத்துறை
- திட்டம்
- தின மலர்
வேலூர், ஜூலை 10: உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசால் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் கடந்த மே 29ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டிற்குள் வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள விவசாயிகளை சந்தித்து அந்தந்த கிராமங்களில் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த துறை களை ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், அரசு நலத்திட்டங்கள் வெகு விரைவாக உழவர்களை சென்றடையவும், 15 நாட்களுக்கு ஒரு முறை (2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில்) வட்டாரங்களில் உள்ள 2 கிராமங்க்ளில் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நாளை நடைபெறும் முகாமில் நவீன வேளாண் தொழில் நுட்பங்கள் உழவர்ற நலன் சார்ந்த இதர அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட உள்ளது. உயிர்ம வேளாண்மை சாகுபடி குறித்த வழி காட்டுதல்கள், உயிர்ம வேளாண்மைச் சான்று பெறுவதற்கான வழிமுறைகள், வேளாண் விளை பொருட்களை மதிப்புக் கூட்டுவதனால் ஏற்படும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மதிப்புக்கூட்டுப் பொருட்களை தயாரிப்பதற்கான வழிமுறைகள், அவற்றை சந்தைப்படுத்துவற்கான ஆலோசனைகள், வழி காட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது. வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான ஆலோசனைகள் வழங்குதல், உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் பயனடைய தேவையான பதிவுகள் மேற்கொள்ளுதல், கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன்கள் பெற தேவையான உதவிகள், ஆலோசனைகள் வழங்குதல், கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான ஆலோசனைகள், பண்ணை இயந்திர கருவிகள் வாங்குதல் மற்றும் வாடகை பெறுவதற்கு தேவையான உதவிகள் வழங்குதல் ஆகிய சேவைகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி வேலூர் ஒன்றியத்தில் முருக்கேரி, மேல்மொணவூர், காட்பாடி ஒன்றியத்தில் வஞ்சூர், வண்டறந்தாங்கல், கிராமங்களிலும், கணியம்பாடி ஒன்றியத்தில் துத்திக்காடு, இடையன்சாத்து கிராமங்களிலும், அணைக்கட்டு ஒன்றியத்தில் பொய்கை, அணைக்கட்டு, விரிஞ்சிபுரம், வேப்பம்குப்பம் கிராமங்களிலும், கே.வி.குப்பம் ஒன்றியத்தில் நெட்டேரி, மேல்விளாச்சூர் கிராமங்களிலும், குடியாத்தம் ஒன்றியத்தில் வீரசெட்டிபள்ளி, கொத்தகுப்பம் கிராமங்களிலும், பேரணாம்பட்டு ஒன்றியத்தில் மேல்பட்டி, ஏரிகுத்தி ஆகிய கிராமங்களில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் இம்முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று வேளாண் இணை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார் தெரிவித்தார்.
The post 14 கிராமங்களில் உழவரைத்தேடி வேளாண்மை திட்ட சிறப்பு முகாம் வேளாண் இணை இயக்குனர் தகவல் வேலூர் மாவட்டத்தில் நாளை appeared first on Dinakaran.
