ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி உச்சிமேடு மேகரையான் தோட்டத்தில் தனியே தங்கியிருந்த தம்பதியான ராமசாமி-பாக்கியம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த 10.75 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த மூவர் கொலை வழக்கு உட்பட 5க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், சிபிசிஐடி போலீசார் திருப்பூர் மாவட்ட கொலை வழக்குடன் சேர்த்து, சிவகிரி இரட்டை கொலை வழக்கையும் விசாரணை நடத்த உள்ளனர். அவர்களிடம் ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாக ஈரோடு மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
The post சிவகிரி இரட்டை கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.