×

பொய்கை கால்நடை சந்தையில் ரூ.80 லட்சம் வர்த்தகம் வேலூர் அருகே

வேலூர், ஜூலை 9: வேலூர் அருகே பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் வரத்து அதிகரித்துள்ளதால் ரூ.80 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இச்சந்தையில் சாதாரணமாக இங்கு விற்பனை என்பது ₹70 லட்சம் முதல் ₹1.30 கோடி வரை நடைபெறும். இந்நிலையில் நேற்று நடந்த மாட்டு சந்தையில் 1,200க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனையானது. கோடை முடிந்தும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினந்தோறும் 100 டிகிரி வெயில் கொளுத்துகிறது. இதனால் கடந்த மாதம் பெய்த மழையால் தீவன தட்டுப்பாடு இல்லை. மேலும் விவசாயிகளும் மாடுகளை விற்பனை செய்ய தயங்குகிறார்கள். இதனால் மாடுகள் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது. தற்போது கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இவைகளில் விலை ஏற்றம் இறக்கமாக உள்ளது. இதனால் விற்பனையும் ₹80 லட்சம் வரை நடந்தது. அதோடு கால்நடைகளுடன் கோழிகள், ஆடுகள் மற்றும் கால்நடைகளுக்கான கயிறு, கழுத்துப்பட்டி உட்பட பொருட்கள் அனைத்தும் விற்பனை அமோகமாக நடந்ததாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.

The post பொய்கை கால்நடை சந்தையில் ரூ.80 லட்சம் வர்த்தகம் வேலூர் அருகே appeared first on Dinakaran.

Tags : Poigai ,Vellore ,Poigai cattle market ,Dinakaran ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...