×

சிறையில் சிக்கியது சாட்டிலைட் செல்போனா? வேலூர் போலீசார் தீவிர விசாரணை

வேலூர், ஜூன் 9: வேலூர் மத்திய சிறையில் சிக்கியது சாட்டிலைட் செல்போனா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மத்திய சிறையில் கடந்த மே மாதம் 28ம் தேதியும், ஜூன் 8ம் தேதியும் கழிவறையில் பதுக்கி வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் செல்போன் பயன்படுத்திய கைதி யார்? மேலும், கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து, எந்த எண்ணிற்கு அழைப்பு சென்றுள்ளது என்று, சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பறிமுதல் செய்யப்பட்ட 2 செல்போன்களில் உள்ள ஐஎம்இஆர் எண்ணை வைத்து நடத்திய ஆய்வில், சிம்கார்டு எதுவும் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. எனவே சிறையில் பறிமுதல் செய்யப்பட்டது சாட்டிலைட் போனாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சிறையில் சிக்கியது சாட்டிலைட் செல்போனா? வேலூர் போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Vellore Central Jail ,Vellore police ,Dinakaran ,
× RELATED 22 மோட்டார் விபத்து வழக்குகளுக்கு ரூ.3.6...