லண்டன்: லண்டனில் 2 பெண்களை பலாத்காரம் செய்த இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனின் சவுத்ஹால் பூங்காவில் 20 வயது பெண்ணை போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, இந்திய வம்சாவளியை சேர்ந்த நவ்ரூப் சிங் (24) என்பவர், கடந்த சில ஆண்டுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே, ஜாமீனில் வெளியே வந்த அவர் கடந்த ஆண்டு அக்டோபர் 23 அன்று மற்றொரு பூங்காவில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இந்த இரண்டு சம்பவங்களையும் தீவிரமாக விசாரித்த மெட்ரோபாலிட்டன் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் நவ்ரூப் சிங்கை கைது செய்தனர். வழக்கை விசாரித்த ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றம், நவ்ரூப் சிங்கிற்று ஆயுள் தண்டனையும், குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறைவாசமும் விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த பாதிக்கப்பட்டவர்களின் தைரியத்தை காவல்துறை பாராட்டியுள்ளது.
The post லண்டனில் 2 பெண்கள் பலாத்காரம்: இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் appeared first on Dinakaran.
