×

ஆலங்குடியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

 

புதுக்கோட்டை, ஜூலை 8: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பினை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்பதை அந்தெந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று மக்களை சந்தித்து ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை எடுத்துக் கூறி தமிழ்நாடு மக்களின் மண் மொழி கலாச்சாரம் பண்பாடு இவற்றையெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்று கூறியும் தமிழ்நாடு அரசின் திட்டங்களை எடுத்து கூறினார்.

பின்னர், மொபைல் செயலி மூலம் திமுகவில் இணையவைத்து இணைந்தவர்களின் வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி அவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு அட்டையையும் வழங்கினார். இதில், திமுகவைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தையும் எழுப்பினர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி ஆலங்குடி பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற, ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பினை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

அப்போது, ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பின் மூலம் திமுக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடையே வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களைதிமுகவின் உறுப்பினராக சேர்க்கும் பணியினை பாக முகவர்களும்,பூத் டிஜிட்டல் ஏஜேண்ட்கள், இளைஞரணி, மகளிரணி மற்றும் பாகநிலை உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.
மேலத்தானியம்

The post ஆலங்குடியில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister Meiyanathan ,Oraniyil Tamil Nadu' movement ,Alangudi ,Pudukottai ,Oraniyil Tamil Nadu' ,Pudukottai district ,Tamil Nadu Backward Classes ,Minister ,Meiyanathan ,DMK ,Oraniyil Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...