×

கரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ரிக்‌ஷா இயக்க அனுமதி அளிக்க வேண்டும்

 

கரூர், ஜூலை 8: திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் ஸ்டாண்ட் அமைத்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த முகாமில், கரூர் மாவட்ட தேசிய ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டுநர்கள் சங்கத்தினர் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்த சங்கத்தில் 70க்கும் மேற்பட்டோர் கடந்த பல ஆண்டுகளாக உறுப்பினராக பதிவு செய்து ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறோம். தற்போது உள்ள பேருந்து நிலையம் இடமாற்றம் செய்யப்படுவதால் எங்களின் ஆட்டோ ஓட்டும் தொழிலும், குடும்ப வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

 

The post கரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ரிக்‌ஷா இயக்க அனுமதி அளிக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : rickshaws ,Karur ,Auto Rickshaw Drivers Association ,Collector's Office ,Thirumanilayur ,Karur District Collector's Office ,Dinakaran ,
× RELATED மின் மோட்டார் பழுதால் கடம்பவனீஸ்வரர்...