நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக பின் நிர்வாகத்தில் அரசின் செலவின குறைப்பு துறையின் தலைவராக இருந்த கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்க் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். டிரம்ப் கொண்டு வந்த வரிச் சலுகை மற்றும் செலவின குறைப்பு மசோதாவை மஸ்க் விமர்சித்ததால் இருவருக்கும் இடையே கடும் வார்த்தை போர் வெடித்தது. இதற்கிடையே, அமெரிக்கா கட்சி எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக எலான் மஸ்க் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘எலான் மஸ்க் தண்டவாளத்தை விட்டு வெளியேறுவதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. கடந்த 5 வாரங்களில் அவரது ரயில் விபத்துக்குள்ளாகி வருவதை பார்ப்பது கவலை தருகிறது. அமெரிக்காவில் எப்போதும் இரு கட்சிகள் தான் இருந்து வருகின்றன. குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளை தாண்டி, 3வது கட்சியை தொடங்கும் திட்டம் அபத்தமானது. எப்போதுமே வெற்றி பெறாது ’’ என்றார்.
The post மஸ்கின் புதிய கட்சி திட்டம் அபத்தமானது: அதிபர் டிரம்ப் விமர்சனம் appeared first on Dinakaran.
