கும்மிடிப்பூண்டி, ஜூலை 8: பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, இன்று மற்றும் நாளை மறுநாள் (10ம் தேதி) காலை 9.15 மணி முதல் மதியம் 3.15 மணி வரை (6 மணி நேரம்) ரயில் மற்றும் மின்சாரத் தடை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, EMU/MEMU ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
முழுமையாக ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: மூர் மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே, காலை 5.40 மணிக்கு புறப்படும் ரயில், சூலூர்பேட்டை – நெல்லூர் காலை 7.50 மணிக்கு புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே காலை 8.05 மணிக்கு புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே காலை 8.35 மணிக்கு புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9 மணிக்கு புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.30 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40 மணிக்கு புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கு புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 11.35 மணிக்கு புறப்படும் ரயில், மூர் மார்க்கெட் – சூலூர்பேட்டை இடையே மதியம் 12.10 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே மதியம் 12.40 மணிக்கு புறப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில், கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் இடையே காலை 9.10 மணிக்கு புறப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் இடையே காலை 9.55 மணிக்கு புறப்படும் ரயில், சூலூர்பேட்டை – மூர் மார்க்கெட் இடையே காலை 10 மணிக்கு புறப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் இடையே காலை 11.25 மணிக்கு புறப்படும் ரயில், சூலூர்பேட்டை – மூர் மார்க்கெட் இடையே மதியம் 11.45 மணிக்கு புறப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் இடையே மதியம் 12 மணிக்கு புறப்படும் ரயில், சூலூர்பேட்டை – மூர் மார்க்கெட் இடையே மதியம் 1.15 மணிக்கு புறப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் இடையே மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி – மூர் மார்க்கெட் இடையே மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில், சூலூர்பேட்டை – மூர் மார்க்கெட் இடையே மதியம் 12.35 மணிக்கு புறப்படும் ரயில், நெல்லூர் – சூலூர்பேட்டை இடையே இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் ஆகியவை மறுமார்க்கத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகுதியளவு ரத்து செய்யப்பட்ட ரயில்கள்: செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி – தாம்பரம் இடையே மதியம் 3 மணிக்கு புறப்படும் ரயில் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்
மூர் மார்க்கெட் – பொன்னேரி இடையே காலை 6.50 மணி, மூர் மார்க்கெட் – பொன்னேரி இடையே காலை 8.05 மணி, மூர் மார்க்கெட் – பொன்னேரி இடையே காலை 9 மணி, மூர் மார்க்கெட் – பொன்னேரி இடையே காலை 9.30 மணி, சென்னை பீச் – மீஞ்சூர் இடையே காலை 9.40 மணி, மூர் மார்க்கெட் – எண்ணூர் இடையே காலை 10.30 மணி, மூர் மார்க்கெட் – மீஞ்சூர் இடையே காலை 11.35 மணி, சென்னை பீச் – எண்ணூர் இடையே மதியம் 12.40 மணி, மூர் மார்க்கெட் – மீஞ்சூர் இடையே மதியம் 1.40 மணி, சென்னை பீச் – மீஞ்சூர் இடையே மதியம் 2.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மறுமார்கத்தில், பொன்னேரி – சென்னை பீச் இடையே காலை 9.08 மணி, பொன்னேரி – மூர் மார்க்கெட் இடையே காலை 9.27 மணி, பொன்னேரி – மூர் மார்க்கெட் இடையே காலை 10.13 மணி, பொன்னேரி – சென்னை பீச் இடையே காலை 11.13 மணி, மீஞ்சூர் – மூர் மார்க்கெட் இடையே காலை 11.25 மணி, எண்ணூர் – மூர் மார்க்கெட் இடையே மதியம் 12.43 மணி, எண்ணூர் – மூர் மார்க்கெட் இடையே மதியம் 1.43 மணி, மீஞ்சூர் – மூர் மார்க்கெட் இடையே மதியம் 1.59 மணி, எண்ணூர் – மூர் மார்க்கெட் இடையே மதியம் 3.56 மணி, மீஞ்சூர் – மூர் மார்க்கெட் இடையே மாலை 4.14 மணி, எண்ணூர் – சென்னை பீச் இடையே மாலை 5.12 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
The post பராமரிப்பு பணிகள் காரணமாக கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.
